தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க அவ்வளவு தூரம் இல்லை அண்ணாமலை

by Staff / 08-11-2022 11:26:52am
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க அவ்வளவு தூரம் இல்லை அண்ணாமலை

சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு பாஜகவின் மருத்துவப் பிரிவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இக்கூட்டத்தில் பேசிய அவர்,"பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று வருகிறது. இமாச்சல் பிரதேச மாநிலத்தில் ஒரு கட்சி 2வது முறையாக வெற்றி பெற்றதே இல்லை என சொல்கிறார்கள். ஆனால் இந்த முறை நாம் வெற்றி பெறுவோம். கடந்த ஒன்றரை வருடங்களாக மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போது welcome modi என்ற ட்வீட் வருகிறது. நம் மக்கள் நம் ஆட்சியை பார்ப்பது மாறி விட்டது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க அவ்வளவு தூரம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் பொறுமையாக இருப்போம் அவ்வளவு தான் என கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo