நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்தவர் தப்பி ஓட்டம்

by Staff / 24-12-2022 11:39:36am
நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்தவர் தப்பி ஓட்டம்

.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் கடந்த 2010ஆம் ஆண்டு இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 12 ஆண்டுகளாக அந்த வழக்கு நடந்து வருகிறது. அதில் ஏற்கனவே முஹம்மது அலி என்பவர் இறந்துள்ளதாகவும் மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் நேற்று அந்த வழக்கின் விசாரனை நடந்தபோது நீதிமன்ற நிலுவையில் இருந்த வழக்கின் விசாரணைக்குகாலையில் 11 பேர் ஆஜராகியிருந்த நிலையில் இதில் 11வது நபராக அப்துல் ரசூல் என்பவருக்கு பதிலாக அவரது மைத்துனர் ரிஸ்வான் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகியதாக கூறப்படுகிறது.ஆள்மாறட்டம் நடந்து இருப்பதாக நீதிமன்ற அலுவலக அலுவலருக்கு தகவல் கிடைத்த நிலையில் அது குறித்து விசாரித்த போது ஆள் மாறாட்டம் செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து புகார் கொடுக்க இருந்த நிலையில் தகவல் தெரிந்த ஆள் மாறாட்டம் செய்த ரிஸ்வானை போலீசார் பிடிக்க முயன்ற போது நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவானார்.இதனையடுத்து நீதிமன்ற தலைமை எழுத்தர் மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில் ஆள்மாறாட்டம் செய்து தப்பி ஓடிய ரிஸ்வான் என்பவரை பிடித்து வழக்கு பதிந்து ஆஜர் படுத்த திருவாடானை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாடானை காவல் ஆய்வாளர் நவநீதிகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via