பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி.

by Editor / 10-05-2024 10:20:46am
  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு  மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 துவங்கி, ஏப்ரல் 8 வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில் தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். பள்ளிகள் வகைப்பாடு தேர்ச்சி விகிதம்: அரசுப் பள்ளிகள் (87.90 %), அரசு உதவி பெறும் பள்ளிகள் (91.77 %), தனியார் சுயநிதி பள்ளிகள் (97.43 %), இருபாலர் பள்ளிகள் (91.93 %) பெண்கள் பள்ளிகள் (93.80 %), ஆண்கள் பள்ளிகள் (83.17 %)

 

Tags : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி.

Share via