மூன்றரை வயது சிறுமி பாலியல் வழக்கில் சர்ச்சை கருத்து... மயிலாடுதுறை ஆட்சியர் மாற்றம்

மூன்றரை வயது சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் சர்ச்சையான வகையில் கருத்து கூறிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மயிலாடுதுறையில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சீர்காழியில் கடந்த 24ஆம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி, 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் குழந்தை மீதும் தவறு இருப்பதாக தெரிவித்தார்.தனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி, குழந்தை, சிறுவனின் முகத்தில் துப்பியதால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் எனக் கூறிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, இது போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும் எனக் கூறினார்.
Tags :