தனியாக வசித்து வந்த பெண் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை செய்த ரேஷன் கடை ஊழியர்!  

by Admin / 04-08-2021 12:27:14pm
தனியாக வசித்து வந்த பெண் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை செய்த ரேஷன் கடை ஊழியர்!  


 
சென்னை கோயம்பேட்டில் கணவனை இழந்து தனியாக வசித்து வரும் பெண்ணை வீடு புகுந்து பாலியியல் தொல்லை கொடுத்த ரேசன் கடை தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 29 வயது பெண் கடந்த 2 வருடத்திற்கு முன் தனது கணவனை இழந்து வாழ்ந்து வருகிறார்.

 இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ரேசன் கடையில் பணிப்புரியும் தற்காலிக ஊழியரான பாண்டியன் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து காவல் நிலையத்தில் தகவல் அளித்ததின் பேரில் பாண்டியனை கைது செய்த போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories