காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களுக்கு ரூ.5 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் அபராதம்.

திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர் உத்தரவின் பெயரில் வன பாதுகாப்பு அலுவலருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமலை வனச்சரகர் மற்றும் வன அதிகாரிகள் சிறுமலை சோதனை சாவடியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் இருசக்கர வாகனத்தில் காட்டுப்பன்றி கொண்டு வந்த மீனாட்சி எஸ்டேட் மேற்பார்வையாளரை பிடித்து விசாரித்ததில் மொத்தம் 11 பேர் காட்டுப்பன்றி வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட வனத்துறை அலுவலர் உத்தரவின் பெயரில் ரூபாய் 5 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags : காட்டுப்பன்றி வேட்டையாடியவர்களுக்கு ரூ.5 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் அபராதம்.