6,000 கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்கு 8 எட்டு போர்க்கப்பல்கள்

by Staff / 06-06-2022 01:38:00pm
6,000 கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்கு 8 எட்டு போர்க்கப்பல்கள்

மேக் இன் இந்தியா திட்டத்தில் 36,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 போர்க்கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்திய கடற்படைத் திட்டப்பட்டுள்ளது இந்திய கடற்படைக்கு கோரவீட்டா 8 போர்க்கப்பல்களை உள்நாட்டு தயாரிப்பு அனுமதி அளிப்பது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் இன்று ஆலோசனை நடத்துகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட உள்ளதால் தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு இந்த திட்டம் பெரிய அளவில் ஊக்கமளிக்கும் என கருதப்படுகிறது. அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு கப்பல் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோரவீட்டா  கப்பல் அதிக போர்த்திறன் கொண்டிருப்பதால் இந்திய கடற்படை கூடுதல் பலம் சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்னல்கள் மற்றும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் 3 விமானங்களை 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கவும் இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via