தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை நேர வெப்பநிலை அதிகரிக்கும்

by Editor / 21-02-2023 06:58:56am
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை நேர வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை நேர வெப்பநிலை இயல்பை விட அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது காலை 8 மணி வரை பனி மூட்டம் நிலவி வருவதாகவும், இந்த சூழல் ஓரிரு நாட்களில் மாறி வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகலநேரங்களில் வெப்பம் கடுமையாக இருக்கும் என்றும், மழைக்கு தற்போது வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Morning temperature will increase in 13 districts of Tamil Nadu

Share via