அமைச்சரை கேலி செய்து வலைதளங்களில் வெளியிட்டவர் கைது

by Staff / 31-01-2023 01:14:50pm
அமைச்சரை கேலி செய்து வலைதளங்களில் வெளியிட்டவர் கைது

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் துணைமேயர் ராஜப்பா ஆகியோரை சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி ஐடி விங் நிர்வாகிகள் பொம்முசுப்பு மற்றும் நாட்ராயன் ஆகியோரை நகர் வடக்கு காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.

 

Tags :

Share via