குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.

by Editor / 17-06-2024 12:01:16am
 குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் இடையிடையே மழை பெய்து வரும் நிலையில் இன்று மதியம் பெய்த மழையால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பரலியார் பகுதியில் ராட்சரம் மரம் சாலை விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்புத்துறை மற்றும் குன்னூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்து கிடக்கும் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு மரத்தை அப்புறப்படுத்தினர் இதனால் காட்டேரி பகுதியில் குன்னூர் காவல்துறையினர் வாகனங்கள் கீழ்நோக்கி செல்லாதவாறு தடுப்பு அமைத்து கோத்தகிரி மார்க்கமாக வாகனங்களை திருப்பி அனுப்பினர் பின்பு சாலை சீரான உடன் மீண்டும் போக்குவரத்து குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்டது இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

Tags : குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு....

Share via