மீண்டும் கைதானர் ஹரிநாடார்.

by Editor / 27-02-2023 10:48:34pm
மீண்டும் கைதானர் ஹரிநாடார்.

நெல்லை மாவட்டம், மேல இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த  ஹரி நாடார் இவர் நாடார் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நபராக மதிக்கப்பட்டவர்.ஆலங்குளம் சட்டமன்றத்தொகுதியில் கடந்த சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை எளிதில் பெற்றுவிடுவார் என அனைவராலும் பேசப்பட்டவர் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தார்.இவரால் முன்னாள் அமைச்சரான பூங்கோதை ஆலடிஅருணாவும் தோல்வியை தழுவினார்.இந்த நிலையில் ஹரி நாடார் தொழிலதிபர்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் 2021ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தநிலையில்  மீண்டும் ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கேரளா மற்றும் குஜராத்தை சேர்ந்த இரு தொழிலதிபர்களிடம் 100 கோடி ரூபாய் கடன் வாங்கித்தருவதாக கூறி ஒன்றைக்கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.இதனால் போலீசார் ஹரி நாடாரிடம் மோசடிகள் 
 குறித்து விசாரணை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories