சிதம்பரத்தில் இன்று முதலமைச்சர் பிரச்சாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லால்புரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.சுதா ஆகியோரை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறாா். இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்கவுள்ளனர்.
Tags :