திருச்சி - திண்டுக்கல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தென்னக இரயில்வே அறிவிப்பு

by Editor / 11-09-2023 09:53:47pm
திருச்சி - திண்டுக்கல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தென்னக இரயில்வே அறிவிப்பு

திண்டுக்கல் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் உள்ள ரயில் பாதைகளை சுத்தமாக பராமரிக்க சரளை கற்கள் அகற்றப்பட்டு காங்கிரிட் சமதளம் அமைக்கப்பட்டது. 

இதன் மூலம் ரயில் பெட்டி கழிப்பறைகளில் இருந்து ரயில் பாதைகளில் விழும் கழிவுகள் எளிதாக சுத்தம் செய்யப்பட்டது. இந்த கான்கிரீட் சமதள ரயில் பாதையில் ரயில்களை குறைந்த வேகத்தில் மட்டுமே இயக்க முடியும்.

தற்போது எல்லா ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறைகள் பயன்பாட்டுக்கு வந்து விட்டதால் ரயில் பெட்டி கழிப்பறை கழிவுகள் ரயில் பாதையில் விழுவது முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

எனவே ரயில்களை உரிய வேகத்தில் இயக்க இந்த கான்கிரீட் தரைதளம் உடைக்கப்பட்டு ரயில் பாதையில் மீண்டும் சரளை கற்கள் நிரப்பும் பணிகள் நடைபெற இருக்கின்றன. 

இதன் காரணமாக திண்டுக்கல் - திருச்சி - திண்டுக்கல் பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 14 வரை திண்டுக்கல் - திருச்சி பயணிகள் சிறப்பு ரயில்  (06498) மற்றும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 13 வரை திருச்சி - திண்டுக்கல்  பயணிகள் சிறப்பு ரயில் (06499) ஆகியவை தாமரைப்பாடி - திண்டுக்கல் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

 

Tags : திருச்சி - திண்டுக்கல் ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தென்னக இரயில்வே அறிவிப்பு

Share via