பாஜகவினர் முற்றுகை போராட்டம் - சசிகலா புஷ்பா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது
பாஜகவினர் முற்றுகை போராட்டம் -கோவில்பட்டியில் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது.
இந்து விரோத போக்கை கடைப்பிடித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக கோரி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே முற்றுகை போராட்டம் நடைபெற்றது..
பாரதிய ஜனதா கட்சியின்தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் , பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பாதலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் திரளான பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்..
நீதிமன்ற விநாயகர் கோவிலில் இருந்து கட்சிக் கொடிகளுடன் ஊர்வலமாக வந்த பாரதிய ஜனதா கட்சியினரை கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே நடுவழியில் தடுத்து நிறுத்தினர்..
அப்போது அங்கு போலீசாருக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோவில் அன்னதான மண்டபம் வரை கட்சிக் கொடிகளுடன் திரண்டு வந்த பாஜகவினர் அப்பகுதியில் தமிழ்நாடு அரசையும், இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷமிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..
Tags :