அரசவை கவிஞர்கள் -ஐடி மகான்கள் என்ற புதிய அடைமொழி காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் பதிவு
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தொடர்ந்து திமுகவை எதிர்க்கும் போக்கில் களம் இறங்கியுள்ளார். நேற்று விஜய்க்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர் இன்று திமுக வெற்றி வெற்றி பெற்ற தொகுதியில் 20 ஆயிரத்திற்கு குறைவாகவாக்குகளில் எத்தனை பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள் யார் அதில் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்கிற கருத்தை பதிவு செய்துள்ளதோடு அரசவை கவிஞர்கள் -ஐடி மகான்கள் என்ற புதிய அடைமொழி வாசகங்களோடு திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை தாக்கியுள்ளார். அவரின் இந்த பதிவு தனிப்பட்ட முறையில் வருகிறதா.. இல்லை, கட்சி மேலிடம் இதை சொல்ல சொல்லி செய்கிறறாரா என்கிற கேள்வி எழுவதாக கூறும் கருத்தும் உள்ளது. டெல்லியில் வரும் 18ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் உயர் கூட்டம் நிகழ்வுற உள்ளது. அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் உடைய தமிழக பயணம் ஜனவரி மாத இறுதியில் உள்ளது என்பது அவதானிக்கப்பட வேண்டும். கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கல்லெறிகிற கதையாக திமுக கூட்டணியில் இருந்து திமுகவை தாக்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளின் போக்கு கூட்டணியை மேலும் மேலும் விரிசல் படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என்றுஅரசியல் நோக்கர்கள்கூறிவருகின்றனா்.
Tags :



















