பண்ணாரி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.64.62 லட்சம் வசூல்.

by Editor / 30-09-2022 08:52:32pm
பண்ணாரி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.64.62 லட்சம் வசூல்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோவிலுக்கு தமிழகம், கர்நாடக மாநில பக்தர்கள் வருகின்றனர். அம்மன் தரிசனத்துக்கு பின் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் காணிக்கையாக செலுத்துகின்றனர்.கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு நிரந்தரமாக 20 உண்டியல்கள் உள்ளன. மாதந்தோறும் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.அதன்படி இந்த மாத உண்டியல் காணிக்கை கோயில் ஆணையாளர் மேனகா, உதவி ஆணையாளர் அன்னக்கொடி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலை யில் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டது. இதில் தனியார் கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். உண்டியலில் மொத்தம் 64 லட்சத்து 62 ஆயிரத்து 460 ரூபாயும், 705 கிராம் தங்கம் , 866 கிராம் வெள்ளிப்பொருள்கள் கிடைத்துள்ளதாக  கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo