இன்று கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில்கே.ஏ செங்கோட்டையனை மிக கடுமையாக தாக்கி பேசினார்.

by Admin / 18-04-2026 12:50:31pm
இன்று கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில்கே.ஏ செங்கோட்டையனை மிக கடுமையாக தாக்கி பேசினார்.

இன்று கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக போட்டியிடும் கே.ஏ செங்கோட்டையனை மிக கடுமையாக தாக்கி பேசினார். செங்கோட்டையன் மனைவியும் மகனும் அவர் மீது புகார் அளித்ததால் அம்மா அவரது அமைச்சர் பதவியை பறித்தார் என்றும் தான் முதலமைச்சரான பின்பு தன்னிடம் வந்து நீ தராவிட்டால் யார் எனக்கு பதவியை தருவார்கள் என்று கண்ணீர் வடித்து கேட்டதனால் நான் அமைச்சர் ஆக்கினேன் அது நான் செய்த மிகப்பெரிய தவறு. அவர் கட்சிக்கு துரோகம் இழைத்து நன்றி கெட்ட தனமாக நடந்து கொண்டார். அவர் திமுகவின் பி.டி.மாக இருந்தவர் என்பதற்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் போது கருணாநிதியின்  படத்தை சைக்கிளில் ஒட்டப்பட்டு மாணவர்களுக்கு வழங்கினார் அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது அந்த சந்தேகத்தை இப்பொழுது அவர் உறுதிப்படுத்தி விட்டார் என்றும் செங்கோட்டையனை பற்றி தன்னால் ஆதாரங்களை வெளியிட முடியும் என்றும் அப்படி செய்தால் அவர் தலை காட்ட முடியாது என்றும் எச்சரித்ததோடு அவரை மரியாதை கொடுத்தால் புரியாத கீழ்த்தரமாக பேசக்கூடிய மனிதர் என்றும் கடுமையாக சாடினார். தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக இருக்கும் செங்கோட்டையின் சமீபத்தில் பரப்புரையின் பொழுது தன்னை முதலமைச்சராக இரவு வரை முடிவு செய்திருந்ததை காலையில் இவர் முதலமைச்சர் என்று அறிவிக்கப்பட்டார் என்றும் மலைபாம்பு போல ஊர்ந்து வந்து பதவியை பிடித்தவர் என்றும் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via
Logo