கான்பூர்-திருச்சி சிறப்பு ரயில்.. முன்பதிவு நாளை தொடக்கம்
கான்பூர் சென்டிரலில் இருந்து ஜூன் 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 01927) 3-வது நாள் காலை 8.40 மணிக்கு திருச்சியை வந்தடையும். மறுமார்க்கத்தில், திருச்சியில் இருந்து ஜூன் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (01928) 4-வது நாள் காலை 4.30 மணிக்கு கான்பூர் சென்டிரலை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
Tags :



















