தந்தையை சமையல் பாத்திரத்தால் அடித்து கொலை செய்த மகள் கைது

டெல்லியின் மன்சரோவர் பார்க் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது தந்தையை சமையல் பாத்திரத்தால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நடந்த விசாரணையில், அந்த பெண் மனநலம் பாதித்தவர் என தெரியவந்துள்ளது. மேலும், மருந்து சாப்பிட தந்தை கட்டாயப்படுத்தியதால் இளம்பெண் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட அந்த பெண் தந்தையை மரணம் அடைய செய்வேன் என நினைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
Tags :