குழந்தை இல்லாத தம்பதியினருக்கு பலன் தரும் செவ்வாழை !

by Editor / 27-09-2021 07:52:47pm
குழந்தை இல்லாத தம்பதியினருக்கு பலன் தரும் செவ்வாழை !

தமிழர்கள் போற்றிய முக்கனிகள் மா, பலா மற்றும் வாழை ஆகும். இதில் வாழை பழம் நமது அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் ஒரு பழமாகி விட்டது. பல சத்துகளை கொண்ட ஒரு இயற்கையான திட உணவாக வாழைப்பழம் இருக்கிறது. வாழைப்பழங்களில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒரு வகை தான் “செவ்வாழை பழம்”. இந்த வகையான வாழை பழத்தின் தாயகம் மத்திய அமெரிக்க நாடு என கூறப்பட்டாலும், பல ஆண்டுகளாகவே நமது நாட்டில் பயிரிடப்படுகிறது.

இயற்கையாகவே செவ்வாழைப்பழம் பல நன்மைகளைத் தரக்கூடியது. இது ஆண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்மை குறைபாட்டை போக்க அருமருந்தாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை நாம் உட்கொள்வது அவசியம். அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது செவ்வாழை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செவ்வாழை பழத்தை சாப்பிட்டால் நன்மைகள் கிடைக்கும்.

ஏனெனில் செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் உள்ளது . இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளது. 50 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.நரம்புத் தளர்ச்சியின் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவது நல்லது. 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் ஆண்மை தன்மை சீரடையும். இரத்த மண்டலத்தில் ஆண்மைக்கான ஊட்டச்சத்திற்கு தேவையான வேதிப்பொருட்களை செவ்வாழைப்பழம் தருவதால் ஆண்மை ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் குழந்தை இல்லாத தம்பதியினர் 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழைப்பழத்தை அரை டீஸ்பூன் தேனுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.21 நாட்களுக்கு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வர பல் வலி, பல்லசைவு , ஈறுகள் பலமடையும்.


இதில்  நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் மூல நோய்க்கு மிகச்சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது . எந்த ஒரு பழத்தையும் சமைத்த உணவோடு நாம் சேர்த்து சாப்பிடும்போது அது நன்கு செரிமானத்தை ஏற்படுத்தும். அதில் உள்ள சத்துக்கள் நம் உடம்பிற்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.செவ்வாழை பழத்தில் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகம் உள்ளது சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்ப வெப்ப மாறுபாடுகளால் உற்பத்தியாகி மனிதர்களை தொற்றும் தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு.

வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.உடலில் வயிறு முக்கியமான ஒரு உறுப்பாகும். இந்த வயிறு ஆரோக்கியமாக இருந்தாலே பல நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம். இதயம் செவ்வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.

இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க செவ்வாழைப்பழங்களை அதிகம் சாப்பிடலாம்.முகத்தில் இருக்கும் ஒரு முக்கிய உறுப்பு கண்கள்.

இந்த கண்களை கொண்டு தான் நாம் அனைத்தையுமே காண்கிறோம். எனவே கண்பார்வை நலமாக இருப்பது அனைவருக்கும் அவசியமாகும். செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.

மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது. கர்ப்பிணி பெண்கள் கருவுற்றிருக்கும் பெண்கள் கருவுற்ற சில மாத காலங்கள் வரை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னஸ் எனப்படும் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு பல பெண்களுக்கு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும். இக்காலத்தில் உடலில் சத்து தேவைகளை செவ்வாழைப்பழம் பூர்த்தி செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் இதில் அதிகம் இருக்கும் பொட்டாசியம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நன்மைகளை ஏற்படுத்துகிறது.

 

Tags :

Share via