பிரதமருக்கு மிரட்டல் - அமைச்சர் மீது வழக்குப்பதிவு.
பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக திமுக அமைச்சர் தா.மோ .அன்பரசன் மீது டெல்லி போலீஸ் வழக்கு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்படுத்துள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ரஞ்சன் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தா.மோ. அன்பரசன் பேசிய வீடியோ வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது
.சென்னை பல்லாவரத்தில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா நடந்த மேடையில், திமுகவை அழைக்க நினைத்தவர்கள் அழிந்து ஒழிந்து போனார்களே தவிர திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் பா.ஜ.கவிற்காக ஓட்டு கேட்டு விட்டு போக வேண்டுமே தவிர திமுகவை அழித்து ஒழித்து விடுவேன் என்று சொல்லுவது தவறு. இது போன்று இனியும் பேசினால்.... என்கிற தொனியில் பேசிய பேச்சு சர்ச்சைக்குரியதாகி உள்ளது.
Tags : பிரதமருக்கு மிரட்டல் - அமைச்சர் மீது வழக்குப்பதிவு















.jpg)



