தமிழகத்தின் 13 மாவட்டங்கள்‌ கனமழை பெய்ய வாய்ப்பு.

by Editor / 31-10-2022 08:02:56am
தமிழகத்தின் 13 மாவட்டங்கள்‌  கனமழை  பெய்ய வாய்ப்பு.

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ இராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, சென்னை, செங்கல்பட்டு, வேலூர்‌, இருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் 13 மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via