குடிபோதையில் செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது

by Editor / 09-02-2023 11:48:03pm
 குடிபோதையில் செல்போன் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது

மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் சலீம். இவர் ஓராண்டுக்கு முன் அண்ணா பேருந்து நிலைய பகுதி வளாகத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் இன்று ஓட்டலுக்கு மீண்டும் சென்ற நிலையில்,  அருகில் உள்ள செல்போன் கடை ஊழியரிடம் பேசியபோது அது வாக்குவாதமாக மாறி உள்ளது.குடிபோதையில் இருந்தவரை கடை ஊழியர்கள் எச்சரித்த போது, ஆத்திரமுற்ற சலீம் பெட்ரோல் நிரப்பிய குளிர்பான பாட்டிலை கடை மீது வீசியதில், பெயர் பலகை கருகியது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சலீமை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo