ஆவின் நெய் கிலோவிற்கு ரூ.70 உயர்வு

by Staff / 14-09-2023 11:43:46am
ஆவின் நெய் கிலோவிற்கு ரூ.70 உயர்வு

ஆவின் நெய் கிலோவிற்கு ரூ.70 உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நெய் அரை கிலோவிற்கு ரூ.50 உயர்ந்துள்ள நிலையில், நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றின் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆவின் நெய் ஒரு லிட்டருக்கு ரூ.70 உயர்த்தப்பட்டு இன்று முதல் ரூ.630-க்கு பதில் ரூ.700-க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் 100 மில்லி ஜார் ரூ.75-ல் இருந்து ரூ.85 ஆகவும், வெண்ணெய் அரை கிலோ ரூ.265-ல் இருந்து ரூ.280-க்கும் விற்கப்படுகிறது. வெண்ணெய் 100 கிராம் ரூ.55-ல் இருந்து ரூ.60 எனவும் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனம் குவிந்து வருகிறது.

 

Tags :

Share via
Logo