ரவுடி குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது 4 கார் 442 மதுபாட்டில்கள் பறிமுதல்

by Editor / 07-02-2022 08:21:03pm
ரவுடி குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது 4 கார் 442 மதுபாட்டில்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதற்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய  எல்லைக்குட்பட்ட போந்தூர் கிராமத்தை சேர்ந்த  தலைமறைவு எதிரியும், குணாவின் கூட்டாளியுமான போந்தூர் சேட்டு மற்றும் மற்றொரு கூட்டாளியான மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு ஆகிய இருவரையும்  காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படையினர் கைது செய்தனர். பிரபுவிடமிருந்து அவரது சொகுசு கார்களான 2 இன்னோவா, 1 பென்ஸ், 1 ஸ்விப்ட் என நான்கு கார்கள் மற்றும் கார்களில் வைத்திருந்த மதுபாட்டில்கள் 442 ( 180 MI ) ஆகியவையும் கைப்பற்றப்பட்டது. என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவுடி குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது 4 கார் 442 மதுபாட்டில்கள் பறிமுதல்
 
Tags :

Share via

More stories

Logo