ஐந்து தென்மாவட்ட ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள்

by Editor / 29-12-2021 09:03:54pm
ஐந்து தென்மாவட்ட ரயில்களில்  மீண்டும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள்

ஜனவரி 1 முதல் திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி (22627/22628), பகல் நேர நாகர்கோவில் -  கோயம்புத்தூர் - நாகர்கோவில் ரயில் (16321/16322),  மதுரை - புனலூர் - மதுரை (16729/16730), ராமேஸ்வரம் - திருச்சி - ராமேஸ்வரம் (16850/16849), திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி (16791/16792) ஆகிய விரைவு ரயில்களில் தலா இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டியுடன் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்படுகின்றன என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via