கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள் 3 பெண்கள் பலி

by Staff / 05-06-2022 04:19:55pm
கெடிலம் ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள் 3 பெண்கள் பலி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கெடிலம்  ஆற்றின் தடுப்பணையில் நீரில் மூழ்கி 4 சிறுமிகள் மூன்று பெண்கள் என ஏழு பேர் உயிரிழந்தனர். குச்சிபாளையத்தில் உள்ள கெடில ஆற்றின் தடுப்பணையில் அருங்குணம் பகுதியை சேர்ந்த சிறுமிகள் பெண்கள் உள்ளிட்டோர் இன்று காலையில் குளிக்க சென்றன. அந்த தடுப்பணையில் குளித்தவர்கள் சிறிது நேரத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த தடுப்பணையில் பள்ளமான இடத்தில் அவர்கள் சிக்கியதாக சொல்லப்படும் நிலையில் முதலில் தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்ற முயன்ற உடன் இருந்தவர்களும் அடுத்தடுத்து மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தவளுகள்  தண்ணீரில் மூழ்கி நீண்ட நேரம் தேடினர். இதை அடுத்து தண்ணீரில் மூழ்கிய 4 சிறுமிகள் 3 பெண்கள் ஆகிய ஏழு பேருமே சடலமாக கண்டெடுக்கப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் சிறுமிகள் இளம் பெண்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பெற்றோர் உற்றார் உறவினர்கள் கதறி துடித்தனர். உடலை பார்வையிட்டு நேரில் விசாரணை மேற்கொண்ட கடலூர் எஸ்பி சக்தி பெற்றோர் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories