ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் - அண்ணாமலை

by Staff / 06-11-2023 04:24:06pm
ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் - அண்ணாமலை

நாகாலாந்து மக்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 'தொடர்ச்சியாக ஆளுநரையும், என்னையும் ஆர்.எஸ்.பாரதி, தரம் தாழ்ந்து பேசி வருகிறார். எதிர்ப்பு தெரிவித்தாலும், திமுக பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை' என விமர்சித்துள்ளார். நாய்க்கறி தின்னும் நாகலாந்துக் காரனே ஆளுரை ஓட ஓட விரட்டி விட்டான், நாமும் ஒட விடுவோம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்துக்கு, பாஜகவினர், ஆளுநர்.ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo