மணிப்பூர் அரசின் முக்கிய முடிவு

மணிப்பூரில் மெய்தி, குக்கி இன மக்களுக்கு இடையே வன்முறை தொடர்ந்து வரும் சூழலில், அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பான வீடியோக்களை ஷேர் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. சமீத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு குழியில் புதைக்கப்பட்ட காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
Tags :