புனித நூலான குரானை எரித்தவர் மரணம்

by Staff / 02-04-2024 01:52:40pm
புனித நூலான குரானை எரித்தவர் மரணம்

இஸ்லாமியர்கள் புனிதமாகக் கருதும் குரானை (திருக்குர்ஆன்) பலமுறை தீ வைத்து எரித்த ஈராக்கின் சல்வான் மோமிகா நோர்வேயில் சடலமாக மீட்கப்பட்டதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. மோமிகா சமீபத்தில் ஸ்வீடனை விட்டு வெளியேறி நார்வேயில் தஞ்சம் புகுந்துள்ளார். இது குறித்து மோமிகா சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் ஸ்வீடன் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இஸ்லாமிய சித்தாந்தத்திற்கு எதிராக போராடுவேன் என்றும் பலமுறை இவர் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via