தேர்தல் பறக்கும் படையால் ரூ. 1. 39 லட்சம் பறிமுதல்

வேடசந்தூர் அருகே குண்டாம்பட்டி பிரிவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் கணக்கில் வராத ரூ1 லட்சத்து 39 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது.விசாரணையில் காரில் வந்தவர் குஜிலியம்பாறை தாலுகா, நல்லூர் ஊராட்சி, அழகப்ப உடையனுரை சேர்ந்த சண்முகவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, வே டசந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் ஆதிகுமாரிடம் ஒப்படைத்தனர்.
Tags :