திருச்சூரில் புகழ் பெற்ற பூரம் திருவிழா

by Editor / 17-04-2022 08:13:35am
 திருச்சூரில் புகழ் பெற்ற பூரம் திருவிழா

நாட்டில் கொரோனா பெரு தொற்றுக்குப்பின்னர் கேரளா மாநிலத்தில் உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா  திருச்சூரில் களைகட்டியது. 30 நாள் நடந்த  இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 100-க்கும் மேற்பட்ட யானைகள் திரளும் அணிவகுப்பு  நேற்றுநடைபெற்றது.இந்த விழாவில்  செண்டை உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பாரம்பரிய இசைக்கருவிகளை கொண்ட பஞ்ச வாத்தியங்களின் சப்தம் விண்ணை பிளக்க வான வேடிக்கைகளும் களை கட்ட யானைகள் தங்கள் முகப்பகுதியில் அணியும் தங்க ஜரிகைகளால் ஆன நெற்றிபட்டம், மயிலிறகுகளாலான ஆலவட்டம், எருதின் முடிகளால் ஆன வெஞ்சாமரம், முத்துகளால் தொகுக்கப்பட்டு முத்துகுடா இவைகள் யாவும் யானைகளின் மீது அமரும் அம்பாரிகளால் பார்வைக்கு வைக்கப்பட்டு யானைகள் அணிவகுத்து நின்றன.

 இந்த கலைநயமிக்க ஆபரணங்கள் யாவும் பரமேக்காவு மற்றும் திருவெம்பாடி கோயில்களில் வடிவமைக்கப்படுகின்றன.இதற்கான ஒத்திகை திருச்சூரின் வடக்குநாத சிவன் கோயில் திடலில் சிறப்பாக நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக நேற்று  பூரம் விழாவில் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் திருச்சூருக்கு படையெடுத்து வந்து குவிந்திருந்தனர்.கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்தினரும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் திருச்சூரில் குவிந்தனர். திருவம்பாடி, வடக்கு நாதர் உள்ளிட்ட 3 கோவில்களில் பூரம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு அந்த மாவட்டமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.2ஆண்டுகளுக்குப்பின்னர் நடைபெற்ற திருவிழா என்பதால் கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு அதிகளவில் மக்கள் கலந்துகொண்டனர்.

 திருச்சூரில் புகழ் பெற்ற பூரம் திருவிழா
 

Tags :

Share via