தமிழகத்தில் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி உள்ளது - கமல்

by Editor / 21-09-2021 12:40:30pm
தமிழகத்தில் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி உள்ளது - கமல்

தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியம் ராஜேந்திர பட்டினம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கிராமசபை கூட்டத்தை நடத்த அனுமதி கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இது குறித்து அவர் அளித்த மனுவில், கிராம சபை கூட்டத்தை நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் மாவட்ட ஆட்சியர் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு ஊராட்சி மன்ற தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளதாகவும், எனவே கிராம சபை கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றியே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறக் கூடிய 9 மாவட்டங்களை தவிர தமிழகம் முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி கிராம சபா கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

 

Tags :

Share via