பத்திர பதிவு செய்ய 500 ரூபாய் நோட்டு கட்டுகளுக்கிடையே பத்து ரூபாய் நோட்டுகளை வைத்து ரூ21 லட்சம் நூதன மோசடி

by Editor / 20-12-2023 10:29:18pm
 பத்திர பதிவு செய்ய 500 ரூபாய் நோட்டு கட்டுகளுக்கிடையே பத்து ரூபாய் நோட்டுகளை வைத்து ரூ21 லட்சம் நூதன மோசடி

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரிடம் ரூ 4 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை கட்ட முடியாத சூழலில் ராஜ் குமார் தனக்கு சொந்தமான மேலகரம் பகுதியில் உள்ள 4 சென்ட்  இடத்தை ரூ25 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இதில் கடன் தொகை ரூ4 லட்சத்தை கழித்து ரூ21 லட்சம் பணத்தை தருவதாக பேசியுள்ளனர்.

இந்நிலையில் இன்று தென்காசி ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடைபெற்ற நிலையில் செந்தில் குமார்
ரூ21 லட்சம் பண கட்டுகள் அடங்கிய பையை ராஜ்குமாரிடம் கொடுத்துள்ளார்.
நம்பிக்கையின் அடிப்படையில் பணப்பையை வாங்கிய ராஜ்குமார் பத்திரம் பதிவு செய்த பின்னர் வெளியே வந்து ரூபாய் நோட்டுகளை எண்ணியுள்ளார்.

இதில், ரூ500 கட்டுகள் என்ற பெயரில் மேல் பகுதியில் மட்டும் 500ரூபாய் நோட்டை வைத்துவிட்டு கட்டுகள் உள்ளே 10ரூபாய் நோட்டுகளை வைத்து ஏமாற்றி உள்ளார். இவ்வாறு 9 கட்டுகளிலும் 500ரூபாய் நோட்டுகளுடன் 10ரூபாய் நோட்டுகள் வைத்து 21லட்சம் கொடுக்க வேண்டிய இடத்தில் ரூ 40ஆயிரம் மட்டுமே இருந்தது தெரியவந்தது.

தான் ஏமாற்றபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் தொலைபேசியில் செந்தில்குமாரை அழைத்தபோது அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதை கண்டு மன உளைச்சக்கு உள்ளாகி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நம்பிக்கையின் பெயரில் அவரிடம் பணத்தைப் பெற்றதாகவும் ஆனால் நான் ஏமாற்றப்பட்டது தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
500 ரூபாய் கட்டுகளுக்கு இடையே பத்து ரூபாய் தாள்களை வைத்து ரூபாய் 21 லட்சம் நூதன மோசடி செய்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : பத்திர பதிவு செய்ய 500 ரூபாய் நோட்டு கட்டுகளுக்கிடையே பத்து ரூபாய் நோட்டுகளை வைத்து ரூ21 லட்சம் நூதன மோசடி

Share via