குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்தது.அலைமோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்.
தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலம் பகுதிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை,ஆகஸ்ட்,ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும் இந்த காலங்களில் இங்குள்ள அருவிகளில் குளிப்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மிகவும் குறைந்த அளவே இந்த பகுதியில் பெய்தது தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயல் தாக்கம் காரணமாக தொடர்ந்து நான்கு நாட்கள் பெய்த மழையின் காரணமாக அருவி களுக்கு நீர்வரத்து அதிகரித்து கொட்டத் தொடங்கியது மேலும்அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு உருவானது.இந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையில்லாத சூழல் நிலவை வருவதால் அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவே தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கின்றது மழை இல்லாத நிலை நீடித்து வருகிறது மேலும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு திரண்டு வந்த சுற்றுலா பயணிகள் விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் அலை மோதி வருகின்றனர் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது மேலும் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து சென்று வண்ணம் உள்ளனர் மேலும் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது.குற்றாலம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
Tags :