அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி பதவியை ராஜனாமா செய்த பின்பு, 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவருக்கு தமிழகத்தின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வரும் அண்ணாமலைக்கு தற்போது தேசிய தலைமை கூடுதல் பொறுப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அண்ணாமலை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது.
Tags :