திமுக தொண்டர்கள் சோர்வடைந்திருந்த நிலையில் அவர்களை உத்வேகம் எடுக்கச் செய்தது த. வெ.க .அரசு- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
இன்று அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக சட்ட துறையின் மண்டல ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்பொழுது அவர் தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காவிரி நீர் விவகாரம் குறித்தும் பேசியதற்காக தன்னை தமிழக வெற்றிக்கழக அரசு கைது செய்த போது திமுக வழக்கறிஞர் அணி தான் நீதிமன்றம் மூலம் அந்த நடவடிக்கையை முறியடித்து தன்னை மீட்டது என்றும் தற்போதைய த. வெ .க அரசு ஒரு பாசிச அரசு என்றும் நின்றால் கைது சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கைது என்று அச்சத்தின் காரணமாகவே இந்த அரசு செயல்படுவதாகவும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக தொண்டர்கள் சோர்வடைந்திருந்த நிலையில் அவர்களை உத்வேகம் எடுக்கச் செய்தது தமிழக வெற்றிக்கழக அரசு என்றும் தெரிவித்தார். டம்மி முதலமைச்சருக்கு யார் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றோ... எம்எல்ஏக்கள் ஆக இருக்கிறார்கள் என்றோ தெரியாது என்றும் துறை சார்ந்த கேள்வி கேட்கும் பொழுது அந்தத் துறைக்கு சம்பந்தப்படாத அமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருப்பதாக சொன்னதோடுகைது என்றால் மற்ற கட்சிகளை போன்று பயப்படுபவர்கள் அல்ல நாம் நிஷாவையும் எமர்ஜென்சியும் பார்த்தவர்கள் என்றும் மீண்டும் கழகத் தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக உட்கார வைப்போம் என்றும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து வழக்குரைஞர் அணி கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியது.
Tags :


















