வேலையை உறுதிப்படுத்தக் கோரி தொழிற்சாலை ஊழியர்கள் 2500 பேர் உள்ளிருப்பு போராட்டம்

by Staff / 06-05-2022 02:40:44pm
வேலையை  உறுதிப்படுத்தக் கோரி  தொழிற்சாலை ஊழியர்கள் 2500 பேர் உள்ளிருப்பு போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கிவரும் போர்டு தொழிற்சாலையில் ஊழியர்கள் தங்களது வேலையை உறுதிப்படுத்தக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான இழப்பு காரணமாக தொழிற்சாலையை மூட போர்டு நிறுவனம் முடிவு எடுத்த நிலையில் ஏற்கனவே பெற்ற ஆர்டர்களை பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் மே மாதம் வரை நீடிக்கலாம் என அந் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஜூன் மாதத்திலிருந்து ஆலையில் வேலை செய்து வரும் சுமார் 2500 ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்த போவதாகவும் போர்டு நிறுவனம் கூறியிருந்தது. இதனையடுத்து வேலை உறுதிப்படுத்தக் கோரி தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo