பத்திரிகையாளர் நல வாரியத்தில் 3,300 பேர் உறுப்பினராக சேர்ப்பு- அமைச்சர் தகவல்.

by Editor / 30-11-2024 01:52:38pm
பத்திரிகையாளர் நல வாரியத்தில் 3,300 பேர் உறுப்பினராக சேர்ப்பு- அமைச்சர் தகவல்.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-பத்திரிகையாளர்களின் நலனைக் காப்பதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 'பத்திரிகையாளர் நலவாரியம்' உருவாக்கப்பட்டது. இந்த நலவாரியத்தில் 3300 பேர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 2431 செய்தியாளர் அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 446 செய்தியாளர்களுக்கு சுகாதார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.பத்திரிகையாளர் நலவாரியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

Tags : பத்திரிகையாளர் நல வாரியத்தில் 3,300 பேர் உறுப்பினராக சேர்ப்பு- அமைச்சர் தகவல்.

Share via