நியூசிலாந்து பிரதமராகும் கிறிஸ் ஹிப்கின்ஸ்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்ஸ் தனது பதவியை ராஜினாமா திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், புதிய பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை தொழிலாளர் கட்சி வெளியிட்டது. ஜெசிந்தாவுக்கு பதிலாக கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் ஹிப்கின்ஸைத் தேர்ந்தெடுக்க 64 தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள். ஹிப்கின்ஸ் தற்போது காவல்துறை மற்றும் கல்வி அமைச்சராக உள்ளார். நாட்டின் 41வது பிரதமராக அவர் பதவியேற்கவுள்ளார். புதிய பிரதமர் 48 மணிநேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அந்நாட்டு அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Tags :