டாக்டர் கிருஷ்ணசாமியின் வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.
தென்காசி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதிமுக வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் வாகனத்தை பண்பொழி - கணக்குப்பிள்ளை வலசை சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.பறக்கும் படையினரின் சோதனைக்கு டாக்டர் கிருஷ்ணசாமி காரை நிறுத்தி முழு ஒத்துழைப்பினை வழங்கினார்.இதன் தொடர்ச்சியாக சோதனையின்போது பறக்கும் படை அலுவலர்கள் உரிய அடையாள அட்டை இல்லாமல் சோதனையிட்ட நிலையில் அவர்களை உரிய அடையாள அட்டையுடன் சோதனை ஈடுபடுமாறு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி வலியுறுத்தினார்.
Tags : டாக்டர் கிருஷ்ணசாமியின் வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.



















