தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

by Staff / 26-09-2022 11:51:43am
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வருவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் புதிய தொழில் முதலீடுகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via