அதிமுக ஆவணங்கள் ஓபிஎஸ் தரப்பிடமிருந்து மீட்பு

சென்னை: கடந்த ஜூலை 11ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அதிமுக அலுவலகத்தில் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்து சென்று விட்டதாக சி.வி. சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் தற்போது மீட்கப்பட்டுள்ளது. சுமார் 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags :