கவர்ச்சி பொருளை காண்பித்து பெண்ணை பலாத்கரம் செய்த கும்பல்

உத்தர பிரதேச மாநிலம் பதோசராய் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணிற்கு மொபைல் ஒன்றை வாங்கி கொடுத்து அடிக்கடி பேசி வந்தார். இந்நிலையில்,5 நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்த இளைஞர், உங்களை கணவர் அழைப்பதாக கூறி யாரும் இல்லாத இடத்திற்கு அவரை அழைத்து சென்றார். அப்பகுதியில் ஏற்கனவே 4பேர் இருந்தனர். பின்னர் அந்த கும்பல் அவரை கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர் மயங்கியதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர், பாதிக்கப்பட்ட இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவரது கணவர் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :