கஞ்சா வழக்கில் 1 லட்சம் அபராதம் 10 ஆண்டு தண்ட
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிக்குண்டம் பகுதியை சேர்ந்த வைத்தியலிங்கம் (53) என்பவர் கடந்த 2014ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து 90 கிலோ கஞ்சாவை வாங்கிக் கொண்டு ரயில் மூலம் மதுரை வந்தார்.இங்கிருந்து உசிலம்பட்டி செல்வதற்காக காத்திருந்த போது மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்த கைப். பைகளை பரிசோதனை செய்த போலீசார் கஞ்சா இருப்பதை உறுதி செய்ததுடன், வழக்குப்பதிவு செய்துஅவரை கைது செய்தனர். கஞ்சாவும் பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் தங்கேஸ்வரன் ஆஜராகி வாதிட்டார்.இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதி செங்கமலச்செல்வன் தீர்ப்பளித்தார். அதில், விங்கசாமி என்ற வைத்திய லிங்கம் மீதான குற்றச்சாட் டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள தால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும். 1 லட்சம் அபராதம் விதித்தார்.
Tags :