ரயில் மோதி நொறுங்கிய பள்ளி வேன் - 5 மாணவர்கள் பலியா..?

ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது கடலூரில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயில் மோதியதில் பள்ளி வாகனம் உருக்குலைந்தது.
கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் கடலூர் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு.
செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்திற்கு, கேட் கீப்பர் தூங்கியதே காரணம் என அதிர்ச்சி தகவல்.50 மீட்டர் தூரம் திகைவீசப்பட்ட பள்ளி வேனிலிருந்த மாணவர்கள் 5 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.படுகாயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.ரயில் மோதியதில் வேன் உருக்குலைந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் உருவாகியுள்ளது.ரயில்வே கேட்டை மூடாததே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளன.
Tags : ரயில் மோதி நொறுங்கிய பள்ளி வேன் - 5 மாணவர்கள் பலியா..?