பெண் டாக்டருக்கு கத்திக்குத்து

by Editor / 15-03-2025 03:09:19pm
 பெண் டாக்டருக்கு கத்திக்குத்து

சென்னை வளசரவாக்கத்தில் பெண் டாக்டருக்கு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற பெண் மருத்துவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்தை விற்பனை செய்வது போல் நாடகமாடி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பெண் மருத்துவரை கத்தியால் குத்திவிட்ட அந்த நபர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து, காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குற்றவாளி நாகமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

 

Tags :

Share via