பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், கடந்த நவ.30ஆம் தேதி கரையை கடந்தது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதில், பலர் உயிரிழந்தனர், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அரசிதழில் வெளியிட்டு உள்ளது. இதன் மூலம், சீரமைப்பு பணிக்கு, பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் பயன்படுத்த முடியும்.
Tags : பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.