டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கிய நபர் பலி

by Editor / 15-03-2025 02:48:30pm
டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கிய நபர் பலி

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினம் பைபாஸ் சாலையில் டெம்பிள் காலனியைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னல் வேகமாக வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் பின்னால் பலமாக மோதியது. இந்த விபத்தில் அந்த நபர் டிவைடரில் மோதி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via