2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்.

by Editor / 29-10-2024 09:26:28am
2025 ஆம் ஆண்டிற்கான  வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்.

2025 ஆம் ஆண்டிற்கான  சுருக்க திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை  அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி  பிரதிநிதிகள் முன்னிலையில்  வெளியிட உள்ளார்கள்.தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று (அக்., 29) தொடங்குகின்றன. பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் செயலி வாயிலாகவும் விண்ணப்பங்களை வழங்கலாம். வார இறுதி நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 69,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் முகாம் நடக்கிறது. நவம்பர் 16, 17, 23, 24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறும்.

 

Tags : 2025 ஆம் ஆண்டிற்கான

Share via